Friday, November 15, 2013

சபரிமலையில் மண்டல காலம் துவக்கம்:
நாளை மாலை நடை திறப்பு!

தமிழகத்தை விட ஒருநாள் முன்னதாக, கேரளாவில் மண்டல காலம் துவங்கு கிறது. இதையொட்டி, சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலையில், கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள், மண்டல காலம் என, அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் ஒருநாள் வித்தியாசத்தில் கார்த்திகை பிறக்கிறது. அந்த வகையில், கார்த்திகை, 1ம் தேதி, தமிழகத்தில், 17ம் தேதியும், கேரளாவில், 16ம் தேதியும் பிறக்கிறது.

சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி, தாமோதரன் போற்றி நடை திறந்து, தீபம் ஏற்றுவார். தொடர்ந்து, அடுத்த ஓராண்டு காலம் தேர்வு செய்யப்பட்டுள்ள, மேல்சாந்திகள் நாராயணன் நம்பூதிரி, மனோஜ் ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி, 18ம் படியேறி, கோவில் முன் வருவர். அவர்களுக்கு பிரசாதம் கொடுத்த பின், 6:30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, அவர்களுக்கு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரங்களை சொல்லிக் கொடுத்து, கோவிலுக்குள் அழைத்து செல்வார். வரும், 16ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து, தீபம் ஏற்றியதும், மண்டல காலம் துவங்கும். தொடர்ந்து நெய் அபிஷேகமும், கணபதி ஹோமமும், இதர பூஜைகளும் நடைபெறும். 41 நாட்கள் பூஜைகள் தொடர்ந்து, டிச., 26ல் மண்டல பூஜை நடைபெறும்.
உத்தம விரதம் சோமவாரம்

சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும். "சோம' என்பது சந்திரனையும் குறிப்பதாக உள்ளது. சந்திரனுக்கு தமிழில் திங்கள், மதி, நிலவு என்ற பெயர்களும் உண்டு. ஈசனையும், சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது.

ஒருமுறை தட்சனின் சாபத்தால் ஒளி குன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறை தொடர்ந்து வளர அருள் செய்தார் ஈசன். இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரம் திங்கள் கிழமையாகும். சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது. உத்தமமான விரதங்களுள் ஒன்று சோமவார விரதம் என்று வேத நூல்கள் கூறும். அதிலும் சிவனுக்குரிய சோமவாரத்தில் கார்த்திகை மாதச் சோமவாரம் மிகவும் உத்தமம்....

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. அவ்வகையில் காஞ்சி மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் செம்பாக்கம் கிராமத்தில் அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயில் கார்த்திகை சோமவார வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு தலமாகக் கருதப்படுகிறது.

திருப்போரூர், செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ள இப்புண்ணிய திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தல விருட்சம் போன்றவற்றில் திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்தை ஒத்திருப்பதால் வடதிருவானைக்கா உத்தரசம்புகேசுவரம் என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சென்று வழிபட்டால் பஞ்சபூதத் தலங்கள், ஐந்து சபை நடராசர் திருத்தலங்கள் மற்றும் ஆறுபடை வீட்டு முருகன் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்று ஆலயத்தின் தலபுராணம் கூறுகிறது. மேலும் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத் தடைகள், தீராப்பிணிகள் நீக்கும் தலமாகவும் உள்ளது.

இந்நிலையில் 30ஆம் ஆண்டு கார்த்திகை சோமவாரப் பெருவிழா நவ:18ஆம் தேதி திங்கட் கிழமையன்று அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலில் நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம், வேதபாராயணம், தேவார இன்னிசை, சமயச் சொற்பொழிவுகள் போன்ற வைபவங்களும் நடக்கின்றன. அன்றிரவு 11 மணிக்கு சம்புகேசுவரப் பெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை வழிபாட்டுடன் விழா முடிவடைகிறது.

தகவலுக்கு: 92833 26355
See More



பதினெட்டு படிகளின் மகிமை

வித்யாதர ஸத்ரி என்னும் தேவலோக மங்கை ஐயப்பனின் அருளால் சாபம் நீங்கப் பெற்றாள். ஐயப்பனை 18 முறை ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து சகலருக்கும் பிறவி சாப விமோசனம் கோரினாள். ஆகவே ஐயன், தன்னை 18 முறை நமஸ்கரித்து வேண்டியதால் 18 சித்திகளையம் 18 படிகளாக்கி 18 வருடம் தன்னை தரிசித்தவர்கள் சித்த புருஷர்களான முமுக்ஷீக்களாவார்கள் என்றும் அதற்காக செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாகவும் வாக்களித்தார். அந்த 18 ஸித்திகளையும் இங்கே காணலாம்.

அணிமா ஸித்தி, லகிமா ஸித்தி, மஹிமா ஸித்தி, ஈசக்த்வ ஸித்தி, வசித்வ ஸித்தி, ப்ராகாம்ய ஸித்தி, புத்தி ஸித்தி, இச்சா ஸித்தி, ப்ராத்தி ஸித்தி, ஸர்வ காம சித்தி, ஸர்வ ஸம்பத்ப்ரத ஸித்தி, ஸர்வப்ரியமகர ஸித்தி, ஸர்வமங்களாகாரண ஸித்தி, ஸர்வ துக்க விமோசன ஸித்தி, ஸர்வம் ருக்யுப்ரசமண ஸித்தி, ஸர்வ விக்ன நிவாரண ஸித்தி, ஸர்வாங்க சுந்தர ஸித்தி, ஸர்வùஸளபாக்யதாயக ஸித்தி ஆகியவையே அந்த 18 ஸித்திகள்.

பய பக்தியுடனும், ஆசாரத்துடனும், அந்தகரண சுதிதியுடனும், ஹரிஹரசுதனை வணங்குபவர்களின் சகல கஷ்டங்களையும் நாசம் செய்து சகல நன்மைகளையும் கொடுத்து காத்து ரட்சித்து வரும் ஐயப்பனின் அருளால் அனைத்தையும் அடையலாம்.
பதினெட்டு படிகளின் மகிமை

வித்யாதர ஸத்ரி என்னும் தேவலோக மங்கை ஐயப்பனின் அருளால் சாபம் நீங்கப் பெற்றாள். ஐயப்பனை 18 முறை ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து சகலருக்கும் பிறவி சாப விமோசனம் கோரினாள். ஆகவே ஐயன், தன்னை 18 முறை நமஸ்கரித்து வேண்டியதால் 18 சித்திகளையம் 18 படிகளாக்கி 18 வருடம் தன்னை தரிசித்தவர்கள் சித்த புருஷர்களான முமுக்ஷீக்களாவார்கள் என்றும் அதற்காக செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாகவும் வாக்களித்தார். அந்த 18 ஸித்திகளையும் இங்கே காணலாம்.

அணிமா ஸித்தி, லகிமா ஸித்தி, மஹிமா ஸித்தி, ஈசக்த்வ ஸித்தி, வசித்வ ஸித்தி, ப்ராகாம்ய ஸித்தி, புத்தி ஸித்தி, இச்சா ஸித்தி, ப்ராத்தி ஸித்தி, ஸர்வ காம சித்தி, ஸர்வ ஸம்பத்ப்ரத ஸித்தி, ஸர்வப்ரியமகர ஸித்தி, ஸர்வமங்களாகாரண ஸித்தி, ஸர்வ துக்க விமோசன ஸித்தி, ஸர்வம் ருக்யுப்ரசமண ஸித்தி, ஸர்வ விக்ன நிவாரண ஸித்தி, ஸர்வாங்க சுந்தர ஸித்தி, ஸர்வùஸளபாக்யதாயக ஸித்தி ஆகியவையே அந்த 18 ஸித்திகள்.

பய பக்தியுடனும், ஆசாரத்துடனும், அந்தகரண சுதிதியுடனும், ஹரிஹரசுதனை வணங்குபவர்களின் சகல கஷ்டங்களையும் நாசம் செய்து சகல நன்மைகளையும் கொடுத்து காத்து ரட்சித்து வரும் ஐயப்பனின் அருளால் அனைத்தையும் அடையலாம்.


கார்த்திகையில் நரசிம்மர் தரிசனம்

கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் வழிபாடு சகல நன்மைகளையும் வழங்க வல்லது என்பது சமயச் சான்றோர்களின் கருத்து. அதுவும் யோக கோலத்தில் உள்ள நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது பன்மடங்கு சிறப்பு வாய்ந்தது. யோக கோலத்துடன் அதுவும் லக்ஷ்மியுடன் சுமார் 16 அடி உயரத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கட்டவாக்கம் என்னுமிடத்தில் ஆலயம் கொண்டுள்ளார். ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி அபய வரத ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மஹாலக்ஷ்மியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன. அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார். மடியில் வீற்றிருக்கும் தாயார், தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் ùஸளந்தர்யமான கோலத்தில் அருள்கிறார்....

மேலும் நரசிம்மருக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்துள்ளன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் - ஆக நவகிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கியிருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும, வஜ்ரதம்ஷ்ட்ரம் வராஹ அவதாரத்தையும், வில் - அம்பு பரசுராம, ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ணாவதாரத்தையும் நினைவுபடுத்துகின்றன. மேலும் ஜய - விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் செய்ய பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் யாவற்றையும் இந்த நரசிம்மரே தாங்கியிருப்பது விசேஷம் (வஜ்ர நகம், வஜ்ரதம்ஷ்ட்ரம், சக்கரம், வில் - அம்பு).

அமைவிடம்: தாம்பரம் - வாலாஜாபாத் சாலையில் வாலாஜாபாத் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது இவ்வாலயம். தாம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

தகவலுக்கு: 94437 74775.
சபிரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும்போது
சொல்ல வேண்டிய மந்திரம்

ஞான முத்ராம் சாஸ்த்ரு
...
குரு முத்ராம் நமாம்யஹம்

வன முத்ராம் சுத்த முத்ராம்

ருத்ர முத்ராம் நமாம்யஹம்

சாந்த முத்ராம் ஸத்திய முத்ராம்

வ்ருத முத்ராம் நமாம்யஹம்

சபர்யாஸ்ரம ஸத்யேன

முத்ராம் பாது ஸதாபிமே

குருதக்ஷிணயா பூர்வம்

தஸ்யாநுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம்

த்வன் முத்ராம் தாரயாம்ஹம்

சின் முத்ராம் கேசரீ முத்ராம்

பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை

நமஸ்துப்யம் நமோ நம:

-இதைச் சொல்லி சரணம் கூப்பிட்ட பின் மாலை அணிந்துகொள்ள வேண்டும்.
வரும் ஞாயிறு 17-11-2013 அண்ணாமலை தீபம் மற்றும்
சர்வாலய தீபம்.

ஞானமும் செல்வமும் நல்கும் தீபத் திருநாள்

( மனத்துக்கினியான்)

மகாபலிச் சக்கரவர்த்தி. பெயர் பெற்ற அசுர அரசன். அவன் முற்பிறவியில் எலியாகப் பிறந்திருந்தான். தான்அறியாமலேயெ தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடித்து வரும்போது, திரியைத் தூண்டி வந்தது அந்த எலி. இதனால், கருவறையில் சர்வ காலமும் விளக்கு பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலேயே எலியாய்ச் செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவி எடுத்தது எலி. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டு ஆணையிட்டான்.

இருள் என்பது வாழ்வின் அந்தமாகிய கடைசியைக் குறிக்கும். ஒளி என்பது, வாழ்வின் நம்பிக்கைத் துவக்கத்தைக் குறிக்கும். நம்பிக்கை ஒளி பிறக்க, இருள் அகன்று ஒளி பெருக விளக்கேற்றி வழிபாடு செய்வது மரபு. கண்கண்ட மாபெரும் விளக்கு சூரியன்தான். அதனால்தான், புத்தியாகிய ஒளியைத் தூண்டுபவரே என்று சூரிய மண்டலத்தில் வாசம் செய்யும் சூரிய நாராயணனை துதிக்கிறோம்.

அறிவு எனும் ஞானத்துக்கும், ஒளி எனும் சூரியனுக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. முதலாழ்வார்கள் மூவர் எனப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரும் இறைவனைக் கண்டு கொண்டு, தங்கள் ஞானம் தூண்டப் பெற்று, இறை ஒளி அறிவினில் புகுந்த காட்சியை விவரிக்கும் போது, இதனையே வெளிப்படுத்தினர்.

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான். – என்று கார்த்திகை விளக்கு ஏற்றும் தத்துவத்தை எளிமையாக விளக்குகிறார். அன்பு விளக்காக, இறைவனைக் காணும் ஆர்வமே நெய்யாகத் தூண்டப் பெற்று, இறைச் சிந்தனையையே திரியாக்கி, எலும்பும் உருகும் அன்பு மிகுந்த ஞானத்தால் நாராயணனுக்கு விளக்கு ஏற்றினேன் என்கிறார் பொய்கையாழ்வார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய, சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை, இடராழி நீங்குகவே என்று – இந்த உலகை விளக்காக்கி, கடலை அதில் இடும் நெய்யாக்கி, ஒளிரும் கதிரவனை விளக்குச் சுடராக்கி, இடர் என்னும் துன்பக் கடல் நீங்குவதற்காக சொல்மாலை சூட்டித் துதித்தேன் என்கிறார் பூதத்தாழ்வார். இவர்கள் இருவரும் விளக்கேற்ற, அந்த விளக்கொளியில் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பெருமானின் தரிசனம் கிட்டுவதை பேயாழ்வார் பாடிவைத்தார்.

எனவே, தீபத்தின் தரிசனம் என்பதும், விளக்கு ஏற்றி, ஒளிபரப்ப வைப்பதும், பண்டைக் காலம் தொட்டே எல்லா சமயத்தவராலும் பின்பற்றப்பட்டு வரும் ஒன்றே. சைவர், வைஷ்ணவர், ஜைனர் என எந்தவிதப் பாகுபாடும் இன்றி தீப வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர்.

தீப வழிபாட்டில் சிறப்பானது ‘கார்த்திகை தீபம் ஆகும்.” தீப தானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.

கார்த்திகை தீபம் என்றாலே மக்கள் மனத்தில் முதலில் எழுவது திருவண்ணாமலையே. அக்னித் தலமான இங்கே மலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளதாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் எனப் பெருமை பெற்ற திருவண்ணாமலை, ஜோதிப் பிழம்பாய் இறைவன் நின்று லீலை நடத்திய இடமே என்பர். அந்த நாளாகிய கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு இறைவனை அனைவரும் அக்னிஸ்வரூபனாக வழிபடுகின்றனர்.

திருமங்கை மன்னனின் திருநட்சத்திரம்:
பேதைநெஞ்சே… வாய்த்தபுகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் இது என்று இந்நாளின் பெருமையைப் போற்றுகிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலை தொகுப்பில். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில்தான் வைணவ ஒளி விளக்காகத் திகழும் திருமங்கையாழ்வார் அவதரித்தார். இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.

தீப ஒளியின் தத்துவம்:
நம்முள் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவது தீப ஒளி. முற்காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பண்டைய நூல்களில் பாவை விளக்குகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

கார்த்திகையில், காசியிலும், ஹரித்துவாரிலும் மாலை நேரம் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் உள்ளது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடும் கங்கா ஆரத்தி முக்கியமான வழிபாடாகத் திகழ்கிறது. ”கார்த்திகை தீபம் கண்டு களித்தவர் கண்களே கண்கள். மற்றதெல்லாம் வெறும் புண்கள்” என்று கார்த்திகை தீபத்தை சிறப்பிப்பார்கள். நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்பில்ல நாயானார் உள்ளிட்டோர் திருவிளக்கு ஏற்றி வைத்து சிவத்தொண்டு புரிந்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு மட்டுமின்றி, இதனை ஒரு விரதமாகவே கொண்டாடுவர். திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டை கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடினார். அண்ணாமலை இறைவனே சூழ் ஒளி விளக்காகத் தோன்றினானாம்.

ஐந்து முக தீபம் ஏன்?
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லட்சுமிகரமாக பொலிவுடன் இருக்கும் என்பர். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,
சகிப்புத் தன்மை, அன்பு இவற்றுக்கு ஒப்பிட்டுக் கூறுவர். இதனாலேயே பஞ்ச முக தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்வது அதிகரித்தது.

தீபத்துக்கு, அகல், எண்ணெய், திரி, சுடர் என நான்கும் சேர வேண்டும். இதனை மனதில் கொண்டே, விளக்கேற்றும் பாவனையில் பாசுரம் பாடினர் பொய்கையாரும், பூதத்தாழ்வாரும். இவை அறம், பொருள், இன்பம், வீடு எனும் திருக்குறள் நெறியைக் காட்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றையும் நமக்கு எடுத்துக் காட்டும். இந்த ஞானமே தீப ஒளியின் தத்துவமாகத் திகழ்கிறது.

பரணி தீபம்:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை, கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் சண்முகரான முருகப் பெருமான், கார்த்திகேயனாக ஒரு முகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

அடிமுடி தேடிய கதை!
ஒரு முறை பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் அற்று தீப வடிவாய்த் திகழும் ஜோதிஸ்வரூபனை திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி”யாக வழிபாடு தொடரக் காரணமானது.

கார்த்திகை தீபத் திருநாள் அன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடும் மரபும் தொடர்ந்தது.

கார்த்திகை பெளர்ணமியில்தான் அன்னை பார்வதி, சிவபெருமானின் இடப்பாகம் பெற்று அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமான அர்த்தநாரீஸ்வரராக இறைவன் அன்றைய தினம் திகழ்வதாகவும் கூறுவர். இப்போதும் கூட, தீபதரிசனத்துக்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற பின்னே, அதிர்வேட்டுகள் முழங்க அண்ணாமலையின் மலைமுகட்டில் தீபம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

தீபம் ஏற்றி வழிபட முடியாத இடங்களில் சொக்கப்பனை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பனை கொளுத்துவர். சொக்கப்பனாகிய சிவபெருமானை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆனதாம்.

பிறவிப்பிணி தீர்ந்து, வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று சுகமாக வாழ்ந்திட, கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையான் அடி தொழுது, முற்பிறவிப் பாவம் போக்கி மேன்மை அடையலாம்.